/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுரங்கவியல் படிப்பு முடித்த 110 பேருக்கு வேலை; என்.எல்.சி.,சேர்மன் தகவல்
/
சுரங்கவியல் படிப்பு முடித்த 110 பேருக்கு வேலை; என்.எல்.சி.,சேர்மன் தகவல்
சுரங்கவியல் படிப்பு முடித்த 110 பேருக்கு வேலை; என்.எல்.சி.,சேர்மன் தகவல்
சுரங்கவியல் படிப்பு முடித்த 110 பேருக்கு வேலை; என்.எல்.சி.,சேர்மன் தகவல்
ADDED : ஜூன் 04, 2025 09:05 AM

சிதம்பரம்; சுரங்கவியில் பட்டயப்படிப்பு முடித்த 100 மாணவ, மாணவிகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையுடன், என்.எல்.சி., சுரங்க நிறுவனம் செய்த புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டயப்படிப்பு நடத்தப்படுகிறது.
பல்கலைக்கழக சுரங்கவியல் துறையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பொறியியல் இயக்கவியல் ஆய்வகம், 20 லட்சம் நிதியில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குடன் கூடிய சுரங்கவியல் துறை கட்டடத்திற்கான இணைப்பு சாலை துவக்க விழா மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 39 தொழில்துறை பயிற்சியாளர்களுக்கு ஆணை வழங்கும் விழா நடந்தது.
சுரங்கவியல் துறை இயக்குனர் பேராசிரியர் சரவணன் 2 புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரவேற்றார்.
என்.எல்.சி., யின் மனிதவள மேம்பாட்டு இயக்குனர் சமீர் ஸ்வரூப், பெரு நிறுவன சமூக பொறுப்புகளுக்கான செயல் இயக்குனர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, ஆய்வகம் மற்றும் இணைப்புச் சாலை திறந்து வைத்து பேசியதாவது:
என்.எல்.சி., இந்த பட்டயப்படிப்பை துவங்க காரணம், என்.எல்.சி., க்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளுக்கு படிப்பு கொடுத்து, வேலை கொடுப்பதே நோக்கமாகும். இதன் மூலம் திறமையான சுரங்கவியில் பொறியாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்.
மேற்படிப்பிற்கு, அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி.,-என்.ஐ.டி போன்ற கல்லுாரி செல்லும் வகையில், தகுதியான ஆய்வு கூடங்கள், சுரங்கவியல் பயிற்சியாளர்கள் உள்ளனர். இங்கு பயிலும், மாணவர்களுக்கு என்.எல்.சி., நிர்வாகம் நேரடி பயிற்சி அளிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுரங்கத்தில் உள்ள மிக பெரிய இயந்திரங்களை கூட, பட்டய படிப்பு மாணவிகளே இயக்குகின்றனர். பயிற்சி முடித்த உடனே என்.எல்.சி., யில் நிரந்தர வேலையும் வழங்கப்படுகிறது. இதுவரை 200 பேர் பயிற்சி முடித்துள்ளனர். அதில், 110 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
நிலங்கள் மற்றும் சுரங்கங்களுக்கான செயல் இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ், பேராசிரியர் சரவணன் ஆகியோர் தொழில்துறை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி ஆணை வழங்கினர்.
என்.எல்.சி., தலைமை பொது மேலாளர் ஸ்ரீனிவாச பாபு, பேராசிரியர் சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர் பழனிவேல் ராஜா நன்றி கூறினார்.