/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுமக்களுடன் 12 ஊராட்சி தலைவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
/
பொதுமக்களுடன் 12 ஊராட்சி தலைவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
பொதுமக்களுடன் 12 ஊராட்சி தலைவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
பொதுமக்களுடன் 12 ஊராட்சி தலைவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
ADDED : டிச 08, 2024 04:54 AM

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிகளுக்கு மழை நிவாரண டோக்கன் வழங்காததை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
அண்ணாகிராம ஒன்றியத்திற்குட்பட்ட பாலுார், சன்னியாசிப்பேட்டை, நரிமேடு, பல்லவராயநத்தம், எழுமேடு, அகரம், சித்தரசூர், சாத்திப்பட்டு, எய்தனுார், கீழ் அருங்குணம், நத்தம், சுந்தரவாண்டி உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்திற்கான டோக்கன் வழங்கவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு 12 ஊராட்சிகளுக்கு நிவாரண தொகை இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த 12 ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:00 மணிக்கு பண்ருட்டி - கடலுார் சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.
தகவலறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த நடுவீரப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அங்கே, பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 2 நாட்களுக்குள் கலெக்டரிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் 11:00 மணிக்கு கலைந்து சென்றனர்.