/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
1,200 கிலோ ரேஷன் பொருள் பண்ருட்டியில் பறிமுதல்
/
1,200 கிலோ ரேஷன் பொருள் பண்ருட்டியில் பறிமுதல்
ADDED : ஜூலை 12, 2025 03:33 AM
பண்ருட்டி:பண்ருட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பொருட்களை குடிமைப் பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். .
பண்ருட்டியில் ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கி வைக்கப்பட்டு ஓட்டல் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக கடலுார் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் குடிமைப் பொருள் வழங்கல் துணை தாசில்தார் சிவக்குமார் தலைமையில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை சக்திவேல் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை தேடி வருகின்றனர்.