/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் நிலையத்துக்கு 1,225 டன் உரம் வருகை
/
ரயில் நிலையத்துக்கு 1,225 டன் உரம் வருகை
ADDED : நவ 15, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் 1,225 டன் உர மூட்டைகள் வந்திறங்கின.
துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்பிக் உர நிறுவனத்தில் இருந்து 800 டன் யூரியா, 300 டன் டி.ஏ.பி., 125 டன் சூப்பர் பாஸ்பேட் உர மூட்டைகள், 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தன. அவற்றை, கடலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்தது.