/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து விதிமீறல் 1,379 வழக்குகள் பதிவு
/
போக்குவரத்து விதிமீறல் 1,379 வழக்குகள் பதிவு
ADDED : ஜன 19, 2026 05:18 AM
கடலுார்: மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது, போக்குவரத்து விதிமீறியதாக 1,379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சாலை விபத்துகளை கட்டுப்படுத்த எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில், மாவட்டம் முழுவதும் கடந்த 14ம் தேதி முதல், 17ம் தேதி வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 29; மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியது 33; சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றதாக 1; ெஹல்மெட் அணியாதது 567; சீட் பெல்ட் அணியாதது 10; அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 20; மற்றும் இதர போக்குவரத்து விதிமீறல் 719; என மொத்தம் 1,379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேபோன்று, கடந்த 14ம் தேதி முதல், 17ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் மது கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக, 66 வழக்குகள் பதிவு செய்து 69 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 737 மது பாட்டில்கள், 7 லிட்டர் சாராயம், இ ரு சக்கர வாகனங்கள் 2, பறிமுதல் செய்யப்பட்டன.

