/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இன்ஜின் கோளாறு; மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்
/
இன்ஜின் கோளாறு; மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்
ADDED : ஜன 20, 2026 03:02 AM
கடலுார்: கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்தில், இன்ஜின் கோளாறு காரணமாக நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி மாலை 4.30 மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக மறுநாள் காலை மைசூர் சென்றடையும். நேற்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்ட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. ரயில்வே அதிகாரிகள் பிரச்சினை சரிசெய்ய முடியாததால், விழுப்புரத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கிருந்த மாற்று ரயில் இன்ஜின் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாலை 6.00 மணிக்கு கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

