/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 14 எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
/
கடலுாரில் 14 எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
ADDED : ஏப் 09, 2025 07:27 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 14 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்ட ஊர்க்காவல் படை சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கடலுார் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், ஆயுதப்படை தில்லைகோவிந்தராஜ பெருமாள் சிதம்பரம் போக்குவரத்து பிரிவிற்கும், ஆயுதப்படை செல்வநாயகம், ராமஜெயம் ஆகியோர் விருத்தாசலம் போக்குவரத்து பிரிவிற்கும், செந்தில்குமார் பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேப் போன்று, கடலூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆயுதப்படைக்கும், பண்ருட்டி சண்முகராஜா சிதம்பரம் போக்குவரத்து பிரிவு என, மாவட்டம் முழுதும் 14 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

