/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பற்றாக்குறையை போக்க வந்தது 1,400 டன் அரிசி
/
பற்றாக்குறையை போக்க வந்தது 1,400 டன் அரிசி
ADDED : நவ 24, 2024 07:02 AM

விருத்தாசலம்,: கடலுார் மாவட்டத்திற்கு பற்றாக்குறையை போக்கும் வகையில், 1,400 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்திறங்கின.
ஆந்திரா மாநிலம், என்.சி.சி.எப்., எனப்படும் மத்திய அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் இருந்து 1,400 டன் அரிசி மூட்டைகள், 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தன. அதனை, மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மூலம் அனைத்து தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்டத்தில் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி மூட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஆந்திர மாநிலம், கங்காவரம் துறைமுகத்தில் இருந்து 1,212 டன் யூரியா உர மூட்டைகள் மற்றொரு சரக்கு ரயில் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்தன. இவற்றை, கடலுார், விழுப்புரம், அரியலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சொசைட்டி மற்றும் தனியார் உர கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்தது.

