/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சதுர்த்திக்கு 1429 சிலைகள்... பிரதிஷ்டை: மாவட்டம் முழுவதும் கொண்டாட்டம்
/
விநாயகர் சதுர்த்திக்கு 1429 சிலைகள்... பிரதிஷ்டை: மாவட்டம் முழுவதும் கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்திக்கு 1429 சிலைகள்... பிரதிஷ்டை: மாவட்டம் முழுவதும் கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்திக்கு 1429 சிலைகள்... பிரதிஷ்டை: மாவட்டம் முழுவதும் கொண்டாட்டம்
ADDED : ஆக 28, 2025 02:18 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1429 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களிடையே ஆன்மிகம் வளர்ந்து வருவதையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
விநாயகர் சிலைகள் வைப்பதற்கு மாவட்ட நிர் வாகம், 10 அடிக்கு மேல் சிலைகள் வைக்கக் கூடாது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை தயாரிக்கக்கூடாது, அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கட்டுப்பாடு களை விதித்தது.
மேலும் பிரச்னைக்குரிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் வண்ணமிகு விநாயகர் சிலைகள் இதற்காக தயார் செய்யப்பட்டு பொது மக்கள் பூஜை செய்ய வைக்கப்படுகிறது.
களிமண், கிழங்குமாவு, ஜவ்வரிசி கழிவுகள் போன்ற மூலப்பொருட்களைக்கொண்டு வண்ணமிகு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகின்றன.
இதுபோன்ற சிலைகள் தயார் செய்வதிலும், கடலில் கரைப்பதிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் கெடாவண்ணம் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் சிலைகளை வாகனங்களில் ஏற்றி சென்று பூஜை செய்ய தயாராகி வருகின்றனர்.
அதேப்போல கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த போலீசார் இதுவரை 1429 இடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு தயார் செய்யப்படும் சிலைகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கடலுார் மாவட்டத்தில் 1429 சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்ய இதுவரை போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சதுர்த்தி விழா முடிந்து 3ம் நாள் விநாயர் சிலைகளை கடலில் கரைப்பது வழக்கம். அதற்காக மாவட்ட நிர்வாகம் தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, உப்பனாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி.,கள் கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் 11 டி.எஸ்.பி.,கள் , இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.