/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது 15 பேருக்கு வழங்கி கவுரவிப்பு
/
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது 15 பேருக்கு வழங்கி கவுரவிப்பு
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது 15 பேருக்கு வழங்கி கவுரவிப்பு
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது 15 பேருக்கு வழங்கி கவுரவிப்பு
ADDED : பிப் 04, 2024 04:42 AM

கடலுார் : 'தினமலர்' நாளிதழ் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக சேவை செய்த 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, 'லட்சிய ஆசிரியர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
கடலுாரில் நடந்த விழாவில், புதுச்சேரி, அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மலர்மதி, எம்.ஜி.ரோடு ஸ்ரீ சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தீபலட்சுமி, கனகம், சீதாலட்சுமி, காரைக்கால் கன்னபூர் அரசு தொடக்கப் பள்ளி செல்வராஜ்.
விழுப்புரம் மாவட்டம் கல்யாணம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி ராஜன், மேட்டுக்குப்பம் கிருஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மனோஜ், கோலியனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சீதாலட்சுமி, மேலமங்கலம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி அன்பழகன், பனப்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி தமிழ்அழகன், சென்னாகுன்னம் அரசு மேல்நிலைப் பள்ளி நாகராஜன்.
கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மஞ்சுளா, பெண்ணாடம் மேற்கு ஊராட்சி நடுநிலைப் பள்ளி கீதா, சிறுவத்துார் ஊராட்சி நடுநிலைப் பள்ளி ராஜ்குமார், சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ரவிச்சந்திரன் ஆகிய 15 பேருக்கு, 'தினமலர்' 'லட்சிய ஆசிரியர் விருது' வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.