sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 இடைநின்ற 1,611 மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்ப்பு : குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல்

/

 இடைநின்ற 1,611 மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்ப்பு : குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல்

 இடைநின்ற 1,611 மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்ப்பு : குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல்

 இடைநின்ற 1,611 மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்ப்பு : குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல்


UPDATED : டிச 11, 2025 06:38 AM

ADDED : டிச 11, 2025 05:58 AM

Google News

UPDATED : டிச 11, 2025 06:38 AM ADDED : டிச 11, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயா தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் கசிமீர் ராஜ், மோனா மட்டில்டா பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயா பேசியதாவது:

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித் துறை மூலம் அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ், 329 தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் 3,098 குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி காரணமாக, 2021--26ம் ஆண்டு வரை இடை நின்ற 1,611 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறை மூலம் குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக குழந்தை திருமணம் மற்றும் இளம்வயது கர்ப்பம் அதிகமாக நடைபெறும், 47 கிராம ஊராட்சிகளை கண்டறிந்து பல்வேறு துறைகள் இணைந்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தை திருமணம் தொடர்பாக, 2025ம் ஆண்டில் 95 புகார்கள் பெறப்பட்டதில், 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

84 புகார்கள் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. போலீஸ் துறை மூலமாக, 2025ம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ், 393 வழக்குகள் பதியபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர் நலத்துறை மூலம் 1,615 தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 8 குழந்தைகள் குழந்தை தொழிலாளர் பணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, பயிற்சி கலெக்டர் மாலதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us