ADDED : டிச 11, 2025 05:57 AM

காட்டுமன்னார்கோவில்: மத்திய அரசை கண்டித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத்தினர் சட்ட மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கம் கூட்டமைப்பு சார்பில், காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின் திருத்த சட்டம் மற்றும் புதிய விதை சட்டத்தினை கண்டித்து போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி, பார்லி., சட்ட மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க கூட்டமைப்பு மண்டல நிர்வாகிகள் சரவணன், குஞ்சிதபாதம், அறிவழகன், அண்ணாதுரை மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் விவசாயிகள் உள்ளிட்ட கலர் பங்கேற்றனர்.

