/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க தேர்தல்
/
நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க தேர்தல்
ADDED : டிச 11, 2025 05:56 AM

சிதம்பரம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தலில், தொழிலாளர்கள் ஓட்டளித்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடந்தது.
அரசியல் கட்சியின் சார்பு சங்கங்களான, அகில இந்திய பார்வர்டு பிளாக் நலச்சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து பணியாளர்கள் மற்றும் சுமை பணியாளர்கள் பொது நலச் சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் யூனியன், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பணியாளர் சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் ஆகிய 8 சங்கங்கள் போட்டியிட்டன.
மாவட்டத்தில், கடலுார் மற்றும் சிதம்பரத்தில் இந்த தேர்தல் நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை நகர், நவீன அரிசி ஆலையில், நடந்த தேர்தலில், ஓட்டளிக்க வேண்டிய பணியாளர்கள், 744 பேர் உள்ளனர்.
இரண்டு ஓட்டுச்சாவடி மையத்திலும், இந்த தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

