/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., ஆய்வு
/
போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., ஆய்வு
ADDED : டிச 11, 2025 05:55 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.
சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா 'திடீர்' ஆய்வு செய்தார். அவர் அங்குள்ள கோப்புகள், குற்ற வழக்குகள், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, வழக்குகளை விரைந்து முடிக்கவும், போலீஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகளை கனிவுடன் விசாரணை செய்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீசாரிடம் அறிவுறுத்தினார்.
மேலும், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கவும், பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், வலியுறுத்தினார்.
சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார், அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் பேபி, வீரலட்சுமி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

