/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து கடலுார் அருகே 18 பேர் படுகாயம்

ADDED : ஏப் 11, 2025 01:23 AM

புதுச்சத்திரம்:கடலுார் அருகே தனியார் மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில், 18 பேர் படுகாயமடைந்தனர்.
கடலுாரில் இருந்து தனியார் பஸ் நேற்று காலை பயணிகளுடன் குள்ளஞ்சாவடிக்கு புறப்பட்டுச் சென்றது. 6:00 மணி அளவில், புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் திடீரென திரும்பியதால், பின்னால் வந்த அரசு விரைவு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பூண்டியாங்குப்பம் சிங்காரவேலு மனைவி தமிழரசி, 65; முருகேசன் மனைவி அசோதை, 49; புவனகிரி உதயகுமார், 35; சென்னை, அயனாவரம் தமிழ் பாட்ஷா, 35; திருத்துறைபூண்டி குமாரசாமி மகன் பிரகாஷ், 28; உட்பட 18 பேர் படுகாய மடைந்தனர்.
புதுச்சத்திரம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு விரைவு பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர்.