/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பை போட்டிகள் மாவட்டத்தில் 19,500 பேர் பதிவு
/
முதல்வர் கோப்பை போட்டிகள் மாவட்டத்தில் 19,500 பேர் பதிவு
முதல்வர் கோப்பை போட்டிகள் மாவட்டத்தில் 19,500 பேர் பதிவு
முதல்வர் கோப்பை போட்டிகள் மாவட்டத்தில் 19,500 பேர் பதிவு
ADDED : ஆக 14, 2025 12:59 AM
கடலுார் : முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க, கடலுார் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித் துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் இருபாலரும் பங்கேற்கும் வகையிலான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் 25 விளையாட்டுப்போட்டிகளும், மண்டல அளவில் 7 வகை விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகை விளையாட்டு போட்டிகளும் மொத்தம் 83.37 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க கடலுார் மாவட்டத்தில் இருந்த மொத்தம் 22 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். நடப்பாண்டில் இதுவரை 19 ஆயிரத்து 500 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு போட்டிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.