/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிடம் பணம் 'அபேஸ்' விருதையில் 2 பேர் கைது
/
பெண்ணிடம் பணம் 'அபேஸ்' விருதையில் 2 பேர் கைது
ADDED : செப் 09, 2025 06:39 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி சிவகாமசுந்தரி, 48. நேற்று மாலை 4:00 மணிக்கு, விருத்தாசலம் கடைவீதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கச் சென்றார்.
அப்போது, தனது கையில் வைத்திருந்த கட்டைப்பையில் இருந்த மணிபர்சை மர்ம நபர் ஒருவர் எடுப்பதை கவனித்தார். உடன், சிவகாமசுந்தரி கூச்சலிட்டதால், அருகில் இருந்த பொது மக்கள் அந்த பெண்ணையும், உடன் வந்த பெண்ணையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாகுறிச்சி பாலு மனைவி மஞ்சு, 40, திருநெல்வேலி, ஸ்ரீபுரம் முருகன் மனைவி சீதாலட்சுமி, 29, என்பதும், பர்சை திருடியதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் ரொக்கத்துடன் இருந்த மணிபர்சை போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். சப் இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப் பதிந்து மஞ்சு, சீதாலட்சுமி ஆகியோரை கைது செய்தார்.