ADDED : ஆக 02, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார், நேற்று காலை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், குறிஞ்சிப்பாடி, சுப்பராயர் நகரைச் சேர்ந்த சிவபாலமுருகன், 30; விழப்பள்ளத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், 21; என்பதும், திருப்பூரில் வேலை செய்த போது, கஞ்சா கடத்தி வந்து குறிஞ்சிப்பாடியில் விற்பனை செய்வதும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து, சிவபாலமுருகன், புருேஷாத்தமனை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 750 கிராம் கஞ்சா, கஞ்சா செடியின் இலை, விதைகளை பறிமுதல் செய்தனர்.

