ADDED : ஏப் 07, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று முன்தினம் பள்ளி நீரோடை பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், விசாரித்தனர்.
இதில், பள்ளிநீரோடையைச் சேர்ந்த சிகாமணி மகன் பார்த்திபன்,23; சங்கர் மகன் சீனுவாசன், 22; என்பதும், 500 கிராம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.