ADDED : ஏப் 25, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, மணவாளநல்லுாரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், மணவாளநல்லுார் ராதாகிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன், 26; என்பதும், வீட்டின் அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரிந்தது. அவரிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேப் போன்று, விளாங்காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வீரமுத்து, 26; என்பவரிடம் இருந்து 40 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.