/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே ஊழியரிடம் போனை பறித்த 2 பேர் கைது
/
ரயில்வே ஊழியரிடம் போனை பறித்த 2 பேர் கைது
ADDED : பிப் 04, 2024 04:51 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் ரயில்வே ஊழியரிடம் மொபைல் போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மல்லியகரையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 30; ரயில்வே ஊழியரான இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் விருத்தாசலம் நாச்சியார்பேட்டையில் உள்ள ரயில்வே சிக்னல் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவர் பாலகிருஷ்ணனின் மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில் மொபைல் போனை பறித்த எருமனுார் காலனியை சேர்ந்த ராசு மகன் சிவமுருகன், 20; குருநாதன் மகன் விஜயகுமார்,20; ஆகியோரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.