தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்விரோத தகராறில் 2 பேர் கைது

முன்விரோத தகராறில் 2 பேர் கைது

முன்விரோத தகராறில் 2 பேர் கைது


ADDED : செப் 05, 2025 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நகரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன,42; செல்வம்,60; பக்கத்து பக்கம் வீடுகளில் வசிக்கின்றனர். உறவினர்களான இவர்களுக்குள் முன்விரோத தகராறு உள்ளது. கடந்த 4ம் தேதி கார்த்திகேயன் தனது வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கும் செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த செல்வம் மகன்கள் வீரபாண்டியன், வீரசிங்கம் ஆகியோர் இரும்பு கம்பியால் கார்த்திகேயன் தலையில் தாக்கினார். இதில், காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். செல்வம் விருத்தாசலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வம், வீரசிங்கம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us