/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் 2 பேர் கைது
/
ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் 2 பேர் கைது
ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் 2 பேர் கைது
ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் 2 பேர் கைது
ADDED : செப் 05, 2025 03:26 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மொத்தமாக பதுக்கி வைத்து, பங்க் கடைகளுக்கு சில்லரை விற்பனை செய்யப்படுவதாக, டி.எஸ்.பி.,யின் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சன்னதி வீதி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த நெடுமாறன் மகன் ரஞ்சித்குமார், 28; ஆறுமுகம் மகன் தமிழ்மாறன், 24. ஆகியோர், பெங்களூருவில் இருந்து குறைந்த விலைக்கு குட்கா பொருட்களை வாங்கி வந்து, விருத்தாசலம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சில்லரை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, ரஞ்சித்குமார், தமிழ்மாறன் ஆகியோரை கைது செய்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 166 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.