/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளத்தில் மூழ்கி 2 சிறுவர் பலி; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
/
குளத்தில் மூழ்கி 2 சிறுவர் பலி; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
குளத்தில் மூழ்கி 2 சிறுவர் பலி; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
குளத்தில் மூழ்கி 2 சிறுவர் பலி; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
ADDED : ஜன 01, 2025 01:05 AM

கடலுார் : கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் மணி என்பவர் மகன் ஸ்ரீஹரன், 13. ஏழாம் வகுப்பு மாணவர். அதே பகுதி சுரேஷ் என்பவர் மகன் சரவண பாலாஜி, 11, ஆறாம் வகுப்பு மாணவர்.
இருவரும், நேற்று காலை நத்தவெளி பகுதியிலுள்ள குளத்தில் குளித்தனர். அப்போது, ஸ்ரீஹரனும், சரவணபாலாஜியும் நீரில் மூழ்கினர்.
இதைப் பார்த்த உடனிருந்த சிறுவர்கள், அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டபடியே அருகிலிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
அவர்கள் சென்று குளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்டபோது, இருவரும் உயிரிழந்தது தெரிந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.