/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரசாயன புகை கசிவு 2 இன்ஜினியர்கள் 'சஸ்பெண்ட்'
/
ரசாயன புகை கசிவு 2 இன்ஜினியர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 07, 2025 01:41 AM
கடலுார்:கடலுார் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன புகை வெளியேறியது தொடர்பாக, இரு இன்ஜினியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கடலுார் சிப்காட்டில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் கிரிம்சன் ரசாயன தொழிற்சாலை விபத்து குறித்த ஆய்வுக்கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பங்கேற்றனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் கூறும் போது, ''கிரிம்சன் தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கையாக கள ஆய்வு மேற்கொள்ளாதது, பணியில் கவனக்குறைவாக செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் இன்ஜினியர் செந்தில் விநாயகம், இன்ஜினியர் தமிழ்ஒளி ஆகியோர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்,'' என்றார்.