ADDED : நவ 16, 2026 09:40 PM
வடலூர்: இரு தரப்பு மோதலில் இருவர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர். 5 பேரை தேடிவருகின்றனர்.
வடலூர், ஆர்.சி நேதாஜி நகரை சேர்ந்தவர் ் ராஜா,48; இவர் கடந்த 14ம் தேதி வடலுார் வாரச் சந்தையில் தக்காளி வியாபாரம் செய்தார். அவரது கடை முன், வடலூர், கோட்டக்கரையை சேர்ந்த வேல்முருகன் மகன் தமிழரசன்,30; தனது வாகனத்தை நிறுத்தினர். அதனை ராஜா கண்டிக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
அதில், காயமடைந்த தமிழரசன் கடலூர் அரசு மருத்துவமனையிலும், ராஜா குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து இருதரப்பு புகார்களின்பேரில், வடலுார் போலீசார், 6 பேர் மீது வழக்கு பதிந்து தமிழரசனை கைது செய்தனர். ராஜா, சிவபிரகாஷ், விக்னேஷ், ராஜ்மோகன் மற்றும் தமிழரசன் சகோதரர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை தேடிவருகின்றனர்.
