/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி 2 வட மாநில வாலிபர்கள் கைது
/
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி 2 வட மாநில வாலிபர்கள் கைது
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி 2 வட மாநில வாலிபர்கள் கைது
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி 2 வட மாநில வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 18, 2025 02:47 AM

கடலுா:கடலுாரில் ஏ.டி.எம்.,மில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபர்கள், இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், கடலுார், செம்மண்டலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.,மில், நேற்று முன் தினம் சிப் பொருத்தி பணம் கொள்ளைடியக்க முயன்ற உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சிவபரன் சிங், 24, அவினேஷ், 28, ஆகியோரை புதுநகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்புத்தகடு, 2000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம்.,மில், நேற்று எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறுகையில், ''பொதுமக்கள் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கும் போது, பணம் வராமல் இருந்தால் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்., மையத்தில் உள்ள புகார் எண்ணில் தெரிவிக்கலாம்.
''பணம் எடுக்கும் போது ஏ.டி.எம்., இயந்திரத்தில் மர்ம பொருட்களோ, சந்தேகப்படும் படி ஸ்கிரீனில் ஏதாவது தெரிந்தால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.