/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு பண்ருட்டியில் 2 ஊராட்சி மக்கள் மனு
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு பண்ருட்டியில் 2 ஊராட்சி மக்கள் மனு
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு பண்ருட்டியில் 2 ஊராட்சி மக்கள் மனு
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு பண்ருட்டியில் 2 ஊராட்சி மக்கள் மனு
ADDED : ஜன 10, 2025 06:19 AM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம், பூங்குணம் ஆகிய இரு ஊராட்சிகள் பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மனு அளித்தனர்.
பண்ருட்டி ஒன்றியம் எல்.என்.புரம், பூங்குணம் ஆகிய இரு ஊராட்சிகளை பண்ருட்டி நகராட்சியுடன் இணைத்து கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டது.இதனை கண்டித்து அப்பகுதிமக்கள் வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தாசில்தார் ஆனந்த் தலைமையில் கருத்துகேட்பு நடந்தது.
பி.டி.ஒ., சக்தி, நகராட்சி கமிஷனர் பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எல்.என்.புரம், பூங்குணம் ஊராட்சி சேர்ந்த மக்கள் சார்பில் பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
எழுத்துபூர்வமாக கடிதம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், பி.டி.ஒ. உள்ளிட்டோர் தங்களுடைய கருத்துக்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதாக கூறினர்.

