/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரின் விரல் 'நறுக்' 2 பேர் கைது: மூவருக்கு வலை
/
வாலிபரின் விரல் 'நறுக்' 2 பேர் கைது: மூவருக்கு வலை
வாலிபரின் விரல் 'நறுக்' 2 பேர் கைது: மூவருக்கு வலை
வாலிபரின் விரல் 'நறுக்' 2 பேர் கைது: மூவருக்கு வலை
ADDED : நவ 02, 2024 05:55 AM

பெண்ணாடம்: முன்விரோத தகராறில் வாலிபரின் விரலை கடித்து துண்டாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர்கள் மணிவண்ணன்,37; மணிமாறன்,35; சகோதரர்கள். மணிமாறன், தமிழ் தேசிய பேரியக்க மாநில செயற்குழு உறுப்பினர். இருவரும் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த கமல், கலைவாணன், சுதாகர்,40; கர்ணன்,28; மகேந்திரன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக மணிமாறனிடம் வாக்குவாதம் செய்து, தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த சுதாகர், மணிமாறனின் வலது கை கட்டை விரலை கடித்து துண்டாக்கினார்.
படுகாயமடைந்த மணிமாறனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து, சுதாகர், கர்ணன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கமல், கலைவாணன், மகேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.