/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.பி., அலுவலகம் அருகே பைக் திருட முயன்ற 2 பேர் கைது
/
எஸ்.பி., அலுவலகம் அருகே பைக் திருட முயன்ற 2 பேர் கைது
எஸ்.பி., அலுவலகம் அருகே பைக் திருட முயன்ற 2 பேர் கைது
எஸ்.பி., அலுவலகம் அருகே பைக் திருட முயன்ற 2 பேர் கைது
ADDED : ஜன 01, 2024 05:44 AM

கடலுார்: கடலுார், புதுநகர் போலீசாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டஇருசக்கர வாகனங்கள் எஸ்.பி., அலுவலக வளாகம் அருகில் உள்ள ஆயுதப்படை அலுவலகம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் வாகனங்களை திருட முயன்றனர்.
அப்போது, அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனங்களை திருட முயன்ற இருவரையும் கையும் களவுமாக பிடித்து புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர்.
விசாரணையில், கடலுார் மஞ்சக்குப்பம் கண்ணன் மகன் பாலகுரு,19;, வேலாயுதம் மகன் விஷால்ராம், 20; என்பதும், இருசக்கர வாகனங்களை திருட முயன்றதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். ஆயுதப்படை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.