/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்
/
கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்
ADDED : டிச 01, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:திருச்சி அடுத்த திருவரம்பூரை சேர்ந்தவர் ராஜ் மகன் ராஜ்குமார், 27; குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழியை சேர்ந்தவர் மூட்டை பூச்சி (எ) சம்பத்குமார்,32; இருவரும் கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவரும் நேற்று சிறையில் மயங்கி விழுந்தனர்.
உடன், அவர்களை சிறைக் காவலர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கடலுார், முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.