/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய பூப்பந்தாட்ட போட்டிக்கு 2 பேர் தேர்வு
/
தேசிய பூப்பந்தாட்ட போட்டிக்கு 2 பேர் தேர்வு
ADDED : டிச 12, 2024 08:02 AM

கடலுார்; தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு பெற்றவர்களை பூப்பந்தாட்ட கழக தலைவர் வாழ்த்தினார்.
மாநில அளவிலான 69வது பூப்பந்தாட்ட பட்டய போட்டி தென்காசியில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
ஜூனியர் பிரிவில் கடலுார் மாவட்டம் சார்பில் பங்கேற்ற சையது உஸ்மான் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார்.
மேலும், பெடரேஷன் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்ற சூரியபிரகாஷ் என்பவரும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பூப்பந்தாட்ட வீரர்கள் சையது உஸ்மான், சூரியபிரகாஷ் ஆகிய இருவரையும் மாவட்ட பூப்பந்து கழக தலைவர் ராக்கவ் தினேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட செயலாளர் விக்ரமன், பொருளாளர் பொன்குரு ராஜேஷ் உடனிருந்தனர்.