/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.43 லட்சம் வாடகை பாக்கி கடலுாாில் 2 கடைகளுக்கு 'சீல்'
/
ரூ.43 லட்சம் வாடகை பாக்கி கடலுாாில் 2 கடைகளுக்கு 'சீல்'
ரூ.43 லட்சம் வாடகை பாக்கி கடலுாாில் 2 கடைகளுக்கு 'சீல்'
ரூ.43 லட்சம் வாடகை பாக்கி கடலுாாில் 2 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஏப் 23, 2025 05:41 AM

கடலுார் : கடலுாரில் ரூ. 43 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடலுார் பஸ் நிலையம் எதிரில் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில், 2 கடை உரிமையாளர்கள், பல ஆண்டுகள் வாடகை செலுத்தாததால் 43 லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது.
கோவில் நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும், கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையெனில் கடையை காலி செய்ய ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று காலை உரிமையாளர்களிடம் கடைகளை காலி செய்ய ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கினர்.
உரிமையாளர்கள் கடையை காலி செய்யாததால் அதிகாரிகள் கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை வெளியே எடுக்க முயற்சித்தனர். பொருட்களை தாங்களே அகற்றிக்கொள்ள கால அவகாசம் கேட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடததால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின், போலீஸ் பாதுகாப்புடன், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், தனி தாசில்தார் ஆனந்த் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது.