ADDED : ஜன 04, 2026 04:22 AM
காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் பெண்ணை கிண்டல் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில், உடையார்குடி பகுதியை சேர்ந்தவர் சல்மான் பாரிஸ்,32; இவரது மனைவி சாரா,28; இவர்கள் நேற்று முன்தினம் இரவு லால்பேட்டை கைகாட்டி பஸ் நிறுத்தும் அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
அப்போது, அங்கு நின்றிருந்த காட்டுமன்னார்கோவில், சந்தை தோப்பு ராஜ் மகன் சக்திவேல்,19; உடையார்குடி, புதுமேல தெரு சந்திரசேகரன் மகன் பரணிதரன்,22; ஆகியோர் சாராவை கிண்டல் செய்தனர். இதனை சல்மான் பாரிஸ் தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும், சல்மான் பாரிசை சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த சாராவையும் தாக்கினர்.
தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிந்து சக்திவேல், பரணிதரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
