தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

 மாணவர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

 மாணவர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


ADDED : பிப் 07, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அருகே பஸ்சில் ஏற்பட்ட தகராறில் பாலிடெக்னிக் மாணவர்களை தாக்கிய, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மணமேடு பகுதியைச் சேர்ந்தவர் அரிதாஸ்,45; இவரது மகன் சுனில் மற்றும் அவரது நண்பர்கள் நிவேதன், பீமாராவ் ஆகியோர் கடலுாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, வீட்டிற்கு செல்வதற்காக புதுச்சேரியிலிருந்து கரையாம்புத்துார் செல்லும் தனியார் பஸ்சில் ஏறினர்.

அப்போது படியில் நின்றிருந்த உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அபிமன்னன் மகன் அஜய்,21; குப்புசாமி மகன் ஷர்மா,19; ஆகியோரிடம் உள்ளே செல்ல வழிவிடக் கேட்டனர்.

இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுனில், நிவேதன், பீமாராவ் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர்.

புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து அஜய், ஷர்மா ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us