ADDED : பிப் 07, 2026 03:59 AM

விருத்தாசலம்: மேற்கு மாவட்ட காங்., தலைவரை மாற்றம் செய்யக்கோரி, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மேற்கு மாவட்ட தலைவராக, விருத்தாசலம் பெரியார்நகரைச் சேர்ந்த லாவண்யா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அக்கட்சியை சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருத்தாசலம் பாலக்கரையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட தலைவர் லாவண்யாவை மாற்றம் செய்யகோரி, அக்கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய பிரிவு தலைவர் ஜெயகுரு தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, கோதண்டபாணி, தெற்கு மாவட்ட பொருப்பாளர் காமராஜ், தலைமை பேச்சாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நெய்வேலி நகர தலைவர் ஸ்டீபன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், வட்டார தலைவர்கள் கலியபெருமாள், பீட்டர் சாமிகண்ணு, சுரேஷ், ஜெயராஜ், இளைஞர் காங்., மாநில செயலர் ஜெய்சங்கர், செந்தில்குமார், மாவட்ட மகிளா காங்., தலைவர் அரசி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

