/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
20 சவரன் கொள்ளை; சிதம்பரத்தில் துணிகரம்
/
20 சவரன் கொள்ளை; சிதம்பரத்தில் துணிகரம்
ADDED : மார் 07, 2024 01:31 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே தனியார் கட்டுமான நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து, 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட தாமோதரன் நகரை சேர்ந்தவர், 65; தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த 2ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். கடந்த 4ம் தேதி திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு 9 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் செல்வராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

