/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 20,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
/
கடலுாரில் 20,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
ADDED : நவ 25, 2025 05:51 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், 20,000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
தமிழகத்தில் அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை மழைக்காலம். இதில், நவம்பரில் அதி களவு மழை பெய்வது வழக்கம். இம்மாதத்தில் மட்டும் அதிகபட்ச மழை பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த மழையை விட குறைவாகவே பெய்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடலுார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக சேத்தியாதோப்பில் 21 செ.மீ., மழை பதிவானது.
மேலும், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரியில் தலா 14 செ.மீ., வடக்குத்து, கொத்தவாச்சேரி உள்ளிட்ட இடங்களில் 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது.
குறிப்பாக, சேத்தியாதோப்பு, குமராட்சி, ஆணைவாரி, நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு, சின்னகுப்பம், பின்னலுார், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால், சேத்தியாதோப்பில் தாழ்வான வயல்களில் மழைநீர் சூழ்ந்து, 20,000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மங்களூர், நல்லு ார், ஒன்றியங்களில் பெய்த தொடர்மழையால் மக்காச்சோளம், கேழ்வரகு, மரவள்ளி பயிர்கள் மழைநீரில் சேதமடைந்து ள்ளன.

