/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்
/
தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்
ADDED : நவ 25, 2025 05:17 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில், இருளர் பழங்குடி நல சங்கம் சார்பில், மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த ஊத்தாங்கால், எடக்குப்பம், சாத்தமங்கலம், சின்னவடவாடி, சாவடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்கள் இலவச வீட்டுமனைபட்டா கேட்டு, பலமுறை மனு கொடுத்துள்ள னர்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று பழங்குடி மக்கள் நலச்சங்கம் மற்றும் மா. கம்யூ., சார்பில், விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையிலான கிராம மக்கள், தாசில்தார் அரவிந்தனிடம் மனு அளித்தனர்.
மா. கம்யூ., கட்சி மாநில குழு உறுப்பினர் பாபு, பழங்குடி நலச்சங்க மாவட்ட தலைவர் அசோகன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், சேகர், சண்முகம் உடனிருந்தனர்.

