/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ்க் கனவு நிகழ்ச்சி கடலுாரில் நாளை நடக்கிறது
/
தமிழ்க் கனவு நிகழ்ச்சி கடலுாரில் நாளை நடக்கிறது
ADDED : நவ 25, 2025 05:18 AM
கடலுார்: கடலுாரில் உயர்கல்வித்துறை சார்பில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நாளை நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
கல்லுாரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபு, தமிழின் பெருமிதத்தை உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறை மற்றும் கல்லுாரி கல்வி இயக்குநரகம் சார்பில் 'தமிழ்க் கனவு' என்ற பெயரிலான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத் திட்டம் நாளை 26ம் தேதி காலை 09.00 மணிக்கு கடலுார், செயின்ட் ஜோசப் கல்லுாரியில் நடக்கிறது.
தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்கள், பல்துறை நிபுணர்கள் பேரூரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சி நடக்கும் கல்லுாரியில் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக் காட்சி, 'நான் முதல்வன்', வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்பு உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் 'வேலைவாய்ப்பு வழிகாட்டி, 'தமிழ்ப்பெருமிதம்' ஆகிய இரு சிற்றேடுகள் வழங்கப்படும்.
'தமிழ்ப்பெருமிதம்' சிற்றேட்டிலுள்ள குறிப்புக்களை வாசித்து சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கப்படும்.

