/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளி பண்டிகையையொட்டி கடலுாரில் 201 பஸ்கள் இயக்கம்
/
தீபாவளி பண்டிகையையொட்டி கடலுாரில் 201 பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி கடலுாரில் 201 பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி கடலுாரில் 201 பஸ்கள் இயக்கம்
ADDED : அக் 28, 2024 05:06 AM
கடலுார் : தீபாவளி பண்டிகையையொட்டி, கடலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் 201 பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்கு வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் நபர்கள் சொந்த ஊர்களுக்கு வருவர்.
இந்நிலையில், வெளியூர்களில் இருந்து வருவோர் தங்கள் சொந்து ஊர்களுக்கு வந்து செல்ல, கடலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 130 பஸ்களும், பெங்களூருக்கு 10 பஸ்களும், சேலத்திற்கு 30 பஸ்களும், திருச்சிக்கு 30 பஸ்களும், கோவைக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.