ADDED : செப் 27, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மளிகைக் கடையில் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
சோழத்தரத்தில் மளிகைக் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று மதியம் 12:00 மணிக்கு சோழத்தரம் கடைவீதி, ஸ்ரீமுஷ்ணம் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள மளிகைக் கடை, பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், சோழத்தரம் மெயின்ரோட்டில் உள்ள சீனிவாசன் என்பரவது மளிகைக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து சீனுவாசனை கைது செய்தனர்வருகின்றனர்.