/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கதண்டு கொட்டியதில் 27 பேர் காயம்
/
கதண்டு கொட்டியதில் 27 பேர் காயம்
ADDED : நவ 27, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: கதண்டு கொட்டியதில், 27 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லிக்குப்பம், புஷ்பா நகரின் அருகே உள்ள பனைமரத்தில் விஷவண்டுகள் கூடு கட்டியிருந்தது. நேற்று முன்தினம் மாலை அந்த வழியே சென்ற ஒருவர், அந்த கூட்டின் மீது கல் எறிந்தார். இதனால் கூட்டில் இருந்து வெளியே வந்த கதண்டு வண்டுகள், அந்த வழியே சென்றவர்களை கொட்டியது.
இதில் அந்த வழியே சென்ற பள்ளி மாணவர்கள் மணிகண்டன்,16; புகழினி,14; கோபிகோ,17; கலைவாணி,19; இளமாறன்,13; அபிநயா,14; மற்றும் ஆலையில் வேலை முடித்து சென்றவர்கள் என, 27; பேரை கொட்டியது. இதில் 21 பேர் நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையிலும் ,6 பேர் கடலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

