/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காய்கறிகள் விதை மானியத்தில் வழங்கல்
/
காய்கறிகள் விதை மானியத்தில் வழங்கல்
ADDED : நவ 27, 2025 04:42 AM
வேப்பூர்: கார்த்திகை பட்ட காய்கறிகள் விதை மானியத்தில் வழங்குவதாக, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலெக்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
நல்லுார் ஒன்றிய பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையை பயன்படுத்தி கார்த்திகை பட்ட சாகுபடி நடக்கிறது. கார்த்திகை விரத நாட்கள் முதல் தை மாதம் பண்டிகை காலம் வரை காய்கறிகள் விலை உயர்வு நீடிக்கும்.
இதனை பயன்படுத்தி, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்தில் வழங்கப்படும் அவரை, பாகல், புடல், கத்திரி, வெண்டை, மிளகாய், வெங்காயம், முருங்கை உள்ளிட்ட விதைகளை பெற்று சாகுபடி செய்து விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்.
விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி புத்தக நகல் உள்ளிட்டவைகளை
ஏ.சித்தூர் தோட்டக்கலைத்துறை அலுவலகம் அல்லது தோட்டக்கலைத்துறை உதவி அலுவலரிடம் வழங்கி பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

