ADDED : நவ 27, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி போலீஸ் எஸ்.ஐ., கனகராஜ் மற்றும் போலீசார் நேற்று தங்களிக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையொட்டி, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 45; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, ஹான்ஸ் பாக்கெட் மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

