/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 1 பொதுத் தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 29,516 பேர் எழுதினர்
/
பிளஸ் 1 பொதுத் தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 29,516 பேர் எழுதினர்
பிளஸ் 1 பொதுத் தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 29,516 பேர் எழுதினர்
பிளஸ் 1 பொதுத் தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 29,516 பேர் எழுதினர்
ADDED : மார் 05, 2024 06:21 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வை. 29 ஆயிரத்து 516 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழகத்தில் பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வு நேற்று துவங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது.
இதற்காக அரசு தேர்வுகள் இயக்ககம் தேர்வு மையங்களில் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கடலுார் மாவட்டத்தில், கடலுார், விருத்தாசலம் என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளது.
மாவட்டத்தில், 246 அரசு மற்றும் அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 928 மாணவர்கள், 15 ஆயிரத்து 201 மாணவிகள் என, மொத்தம் 30 ஆயிரத்து 129 பேர் தேர்வு எழுத, அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அதற்காக, மாவட்டம் முழுதும் 122 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை பிளஸ்1 தேர்வு துவங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.
தேர்வு கண்காணிப்பு பணியில் 250 பேர் அடங்கிய பறக்கும் படையினர் ஈடுபட்டனர். மாவட்டம் முழுதும் 29 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதினர். 513 பேர் ஆப்சென்ட் ஆகினர்.