/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2ம் புயல் கூண்டு கடலுாரில் ஏற்றம்
/
2ம் புயல் கூண்டு கடலுாரில் ஏற்றம்
ADDED : அக் 24, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் துறைமுகத்தில் டானா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக, இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
டானா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக, கடலுார் முதுநகர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. வங்கக்கடலில் உருவான புயல் கரையை நெருங்கி வருகிறது.
இதையடுத்து நேற்று கடலுார் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. டானா புயல் 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஒடிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.