ADDED : ஏப் 05, 2025 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கொத்தனாரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், ஆல்பேட்டை குண்டு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் பாட்ஷா 25; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் காலை பாகூர் பெரிய ஆராய்ச்சிக்குப்பம் சுடுகாடு எரிக்கொட்டகை அருகே அமர்ந்து சாராயம் குடித்து கொண்டிருந்தார்.
அங்கு வந்த கடலுார், முதுநகர் அக்கரைகோரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் 24; அஜித்குமார்25; வசந்தகுமார் 19; ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஷேக் பாஷாவிடம் தகராறு செய்து, அருகில் கிடந்த கல்லால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த ஷேக் பாட்ஷா கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, ஷேக் பாஷாவை தாக்கிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

