/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தம்பதி மீது தாக்குதல் 3 பேர் கைது
/
தம்பதி மீது தாக்குதல் 3 பேர் கைது
ADDED : ஆக 06, 2025 11:37 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலடி அடுத்த ஆர்.சி.கன்னியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசேகர், 24. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 23. இவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்ச்செல்வி தினசரி காலையில் எழுந்து வீட்டு வேலை செய்யவில்லை என கூறி, கடந்த 3 ம் தேதி வீரசேகரனின் தாய் அம்பிகா திட்டி உள்ளார்.
இதனால், வீரசேகர், தாய் அம்பிகா இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அம்பிகா, கணவர் ராமலிங்கம், மகன் வீரசெல்வம் ஆகியோர் சேர்ந்து வீரசேகர், மனைவி தமிழ்ச்செல்வி ஆகிய இருவரையும் தாக்கினர்.
புகாரின் பேரில், ஆலடி போலீசார் ராமலிங்கம், 55; வீரச்செல்வம், 21; அம்பிகா, 50, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.