ADDED : நவ 29, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மணல் திருட்டு வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவந்திபுரம் அருகே கெடிலம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிவந்த டி.புதுாரைச் சேர்ந்த கட்டையன் என்கிற லட்சகுரு, 47, என்பவரை கைது செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். அதேபோல் கே.என்.பேட்டை பஸ்நிறுத்தம் அருகே மினிலாரியில் மணல் கடத்திச்சென்ற பண்ருட்டி அடுத்த பாலுாரைச் சேர்ந்த கிருஷ்ணராஜ்,32, எம்.புதுாரை சேர்ந்த அப்பு,25, ஆகியோரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். திருப்பாதிரிப்புலியூர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.